ETV Bharat / bharat

2024ஆம் ஆண்டில் இந்தியாவில் குவாட் உச்சி மாநாடு - பிரதமர் மோடி மகிழ்ச்சி! - Pm modi

2024ஆம் ஆண்டு குவாட் உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

Quad Meet
Quad Meet
author img

By

Published : May 21, 2023, 3:30 PM IST

டோக்கியோ : 2024ஆம் ஆண்டு இந்தியாவில் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

குவாட் என்ற அமைப்பில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. எல்லைப் பாதுகாப்பு, பிராந்திய பிரச்னைகள், வர்த்தகம், பொருளாதாரம், போர் பயிற்சி, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் இந்த மாநாடு நடைபெற்று வரும் நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான குவாட் மாநாடு வரும் மே. 24ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஜி7 மாநாடு மற்றும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 6 நாட்கள் பயணமாக ஜப்பான், ஆஸ்திரேலியா, புவா நியூ கினியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி செல்ல திட்டமிட்டார்.

ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, அங்கு ஹிரோசிமா நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் குவாட் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், அமெரிக்காவில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்ககளை ஆராய அதிபர் பைடன் செல்ல வேண்டி இருந்த நிலையில், அவரது ஆஸ்திரேலியா பயணம் ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற இருந்த குவாட் அமைப்பின் மாநாடு, ஜப்பானில் ஜி7 மாநாட்டின் இடையே நடத்தப்படும் சூழல் உருவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குவாட் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, "இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, வெளிப்படையான, ஒருங்கிணைந்த வளர்ச்சியை உருவாக்குவதே குவாட் அமைப்பின் பிரதான நோக்கம். உலக நலன், மக்களின் நல்வாழ்வு, வளம் மற்றும் அமைதியை நிலைநிறுத்த குவாட் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்.

மேலும் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆக்கப்பூர்மான நோக்கங்களை ஜனநாயக ரீதியிலான முறையில் செயல்படுத்துவோம்’’ என்று பிரதமர் மோடி கூறினார். மேலும், ''2024ஆம் ஆண்டு குவாட் உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக" பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்த குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள கடல் வழிகளில் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை பேணுவதை மட்டுமே முக்கிய குறிக்கோளாக கொண்டு தொடங்கப்பட்டது தான், குவாட் அமைப்பு.

முதன்முதலில் கடற்படை போர் பயிற்சியில் மட்டுமே இந்த அமைப்பில் உள்ள நாடுகள் ஈடுபட்டு வந்தன. மலபார் போர் பயிற்சி என்ற பெயரில் 4 நாடுகளும் முதலில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தன. நாளடைவில் பொருளாதாரம், வர்த்தகம், எரிசக்தி துறை, பிராந்திய வளர்ச்சி சார்ந்த செயல்களில் இந்த அமைப்பு ஈடுபடத் தொடங்கியது.

இதையும் படிங்க : கிழக்கு லடாக்கில் சீனாவின் ஊடுருவல் - ஜி7 மாநாட்டில் உண்மையை உடைத்த பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.