மும்பை: பாரத ரத்னா விருது பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், கடந்த பிப்ரவரி மாதம் தனது 92ஆவது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது நினைவாக இந்தாண்டு முதல் "லதா தீனநாத் மங்கேஷ்கர் விருது" வழங்கப்படும் என தீனநாத் மங்கேஷ்கர் ஸ்மிருதி பிரதிஷ்தான் அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் தன்னலமற்ற சேவை ஆற்றிய நபருக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்றும், அந்த வகையில் முதல் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி, இந்தியாவை உலக அரங்கில் நிலை நிறுத்திய தலைவர் என்பதாலும், அவரால் நாடு அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சி பெற்றுள்ளதாலும், அவரது தன்னலமற்ற சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, லதா மங்கேஷ்கரின் தந்தை தீனநாத் மங்கேஷ்கரின் 80-வது நினைவு தினத்தையொட்டி இன்று (ஏப்ரல் 24) மும்பையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில், லதா மங்கேஷ்கரின் சகோதரியான உஷா மங்கேஷ்கர், "லதா தீனநாத் மங்கேஷ்கர் விருது"-ஐ பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவித்தார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, "தனது கலாசார புரிதலில், இசை என்பது மனிதர்களை இணைக்கும் ஒரு சாதனம் என்றும், அது ஒரு உணர்வு என்றும் தெரிவித்தார். இந்த விருதை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார்".
இதையும் படிங்க: புதுச்சேரியில் அமித்ஷா.. பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை