டெல்லி: நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில், பாதுகாப்புத்துறை, உள்துறை, வெளியுறவுத்துறை, நிதி ஆகிய துறைகளின் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
ஆப்கானிஸ்தானில், தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்த இந்தியத் தூதர், தூதர் அலுவலகத்தில் பணியாற்றிய அலுவலர்கள் உள்ளிட்டவர்களை இந்திய அரசு இரண்டு கட்டங்களாக அழைத்து வந்துள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்தும், இந்தியாவின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்க பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தை பிரதமர் மோடி நேற்று (ஆக.17) கூட்டினார்.
இதில், ஆப்கான் நிலவரம் குறித்து ஆப்கானுக்கான இந்தியத் தூதர் விவரித்து வருவதாகக் கூறப்படுகிறது. தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் தெரிகிறது.
இதையும் படிங்க: தாலிபன்கள் பிடியில் காபூல்- மலையாளிகளை மீட்க விஜயன் கோரிக்கை!