பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.8) காலை கரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோஸை பெற்றுக் கொண்டார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தத் தடுப்பூசியை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த செவிலி நிஷா சர்மா செலுத்தினார். அவருடன் புதுச்சேரியைச் சேர்ந்த செவிலி பி.நிவேதா உடனிருந்தார். இவர் முதல் டோஸை பிரதமர் செலுத்தி கொண்டபோதும் உடனிருந்தவர்.
இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன். கரோனா வைரஸை தடுப்பதற்கான சில வழிகளில் தடுப்பூசி முக்கியமானது.
நீங்கள் கரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருந்தால், விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அவர் மார்ச் 1ஆம் தேதி கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா: முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை