ETV Bharat / bharat

தேசிய ஆட்டோமொபைல் ஸ்கிராபேஜ் கொள்கைத் திட்டம் தொடக்கம் - தேசிய ஆட்டோமொபைல் ஸ்கிராபேஜ் திட்டம்

வாகனங்கள் வெளியிடும் மாசுகளை குறைக்கும் முயற்சியில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஆட்டோமொபைல் ஸ்கிராபேஜ் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தக் கொள்கையானது சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக அகற்ற உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆட்டோமொபைல் ஸ்கிராபேஜ் கொள்கைத் திட்டம் தொடக்கம்

author img

By

Published : Aug 13, 2021, 9:00 PM IST

டெல்லி: நாட்டில் வாகன மக்கள் தொகை நவீனமயமாக்கலில், சாலைகளில் இருந்து தகுதியற்ற வாகனங்களை அறிவியல் முறையில் அகற்றுவதில் வாகனக் கழிவு கொள்கை பெரும் பங்கு வகிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றினார்.

தேசிய ஆட்டோமொபைல் ஸ்கிராப்பேஜ் (கழிவு) கொள்கை திட்டத்தினை தொடங்கி வைத்து பிரதமர், இது சூழல் மாசுபாட்டைக் குறைக்க பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

தேசிய ஆட்டோமொபைல் ஸ்கிராப்பேஜ் கொள்கை திட்டம்

  • இந்தக் கொள்கை மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் மீட்பு கொள்கையைப் பின்பற்றும், இது ஆட்டோ துறை மற்றும் உலோகத் துறையில் நாட்டின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும்
  • இந்தக் கொள்கை புதிய முதலீட்டை ஊக்குவிப்பதுடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்
  • பழைய வாகனத்தை அகற்றும்போது சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் வைத்திருப்பவர் புதிய வாகனம் வாங்கும் போது பதிவு செய்ய பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
  • அங்கீகரிக்கப்பட்ட, தானியங்கி சோதனை மையங்கள் மூலம் வாகனங்கள் அறிவியல் பூர்வமாக சோதிக்கப்படும். தகுதியற்ற வாகனங்கள் அறிவியல் பூர்வமாக அகற்றப்படும்.
  • பழைய வாகனத்தின் பராமரிப்பு செலவு, பழுதுபார்க்கும் செலவு, எரிபொருள் திறன் ஆகியவை இதில் சேமிக்கப்படும்.
  • இந்தக் கொள்கை நகரங்களில் மாசுபாட்டைக் குறைக்கவும் உதவும்

ஒரு வட்ட பொருளாதாரம் என்பது தயாரிப்புகள் ஆயுள், மறுபயன்பாடு, மறுசுழற்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை இந்தியாவிற்கு ஒரு புதிய அடையாளத்தை ஆட்டோ துறையில் கொடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.