கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர் பல்கலைக்கழகத்தில் சீனியர் மாணவர்களின் ராகிங் காரணமாக வணிகவியல் படித்துவரும் ஆனந்த் என்ற மாணவர் நவம்பர் 27ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றார். குறிப்பாக ராகிங் செய்துகொண்டிருக்கும்போதே விடுதியின் 2ஆவது மாடியிலிருந்து குதித்தார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்து வருகிறார். இதுதொடர்பாக 21 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ராகுல் செத்ரி என்னும் மாணவர் தலைமறைவானார்.
இந்த மாணவரை போலீசார் தேடிவந்த நிலையில், இன்று (டிசம்பர் 5) லேகாபானி காவல் நிலையத்தில் செத்ரி சரணடைந்தார். அதன்பின் திப்ருகரில் உள்ள சதார் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார், இவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுத்தி, சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மாணவர்களிடம் ராகிங் வேண்டாம் பெற்றோர், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்துங்கள் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பன்னீர் பர்கருக்கு பதில் சிக்கன் பர்கர் டெலிவரி - சொமேட்டோவுக்கு ஃபைன்