டெல்லி: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வின் தொடக்க உரையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நிகழ்த்தினார். தொடர்ந்து 5 மணிநேரம் நடைபெறும் இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜகவின் 124 தலைவர்கள் நேரடியாகவும், சிலர் காணொலி காட்சி வாயிலாகவும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள், வளர்ச்சி பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.
மிக முக்கியமாக, 2022ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சில மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அந்தந்த மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை அறிவிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
கரோனா தொற்று பரவல், தடுப்பூசி செலுத்துவது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதையும் படிங்க: கோவர்தன் பூஜை: 8 முறை சவுக்கடி வாங்கிய சத்தீஸ்கர் முதலமைச்சர்