ETV Bharat / bharat

இறுதிவரை போராடிய பிரக்ஞானந்தா - பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து! - etv bharat tamil

FIDE chess: உலக சாம்பியன் செஸ் தொடரில் இரண்டம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர் மோடி,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

இறுதிவரை போராடிய பிரக்ஞானந்தா...பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 7:46 PM IST

ஹைதராபாத்: அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் ஃபிடே உலக சாம்பியன் செஸ் தொடரின் அரையிறுதியில் அமெரிக்க வீரர் ஃபேபியா கருவானாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார் சென்னை வீரர் பிரக்ஞானந்தா. இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான நார்வே நாட்டை மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக ஆட்டம் நடந்த நிலையில் டைபிரேக்கர் போட்டியின் முதல் சுற்றில் 1-0 என்ற கணக்கில் நார்வேயின் கார்ல்சன் வெற்றி பெற்றார். இதில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, கடுமையான முயற்சியை மேற்கொண்டார்.

இதனையடுத்து டைபிரேக்கர் முறையின் இரண்டாவது சுற்று தொடங்கியது இதில் கறுப்பு நிற காய்கள் உடன் விளையாடிய பிரக்ஞானந்தா கடும் முயற்சி உடன் விளையாடினார். இறுதியாக டைபிரேக்கர் சுற்றின் 2 வது சுற்றில் 0.5-0.5 என்ற கணக்கில் நிறைவு பெற்றது. நார்வேயின் கார்ல்சன் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் .இதன் மூலம், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 6வது முறையாக கார்ல்சன் வென்று உள்ளார். இருப்பினும் இறுதி வரை போரடிய பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,மத்திய அமைச்சர் அனுராத் தாக்கூர்,முன்னாள் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கள் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

  • We are proud of Praggnanandhaa for his remarkable performance at the FIDE World Cup! He showcased his exceptional skills and gave a tough fight to the formidable Magnus Carlsen in the finals. This is no small feat. Wishing him the very best for his upcoming tournaments. pic.twitter.com/KXYcFRGYTO

    — Narendra Modi (@narendramodi) August 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பிரதமர் மோடி: உலகக் கோப்பையில் பிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்! தனது அசாத்தியமான திறமைகள் மூலம் மற்றும் இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக கடுமையாகப் போட்டியிட்டுள்ளீர்கள்.இது சிறிய சாதனையல்ல. இனி வரவிருக்கும் போட்டிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள் பிரக்ஞானந்தா! என தெரிவித்துள்ளார்.

  • Heartfelt congratulations to #Chennai's pride, @rpragchess, on your outstanding performance in the 2023 #FIDEWorldCup!

    Your journey to the final, defeating world #2 Nakamura and #3 Caruana, has left us all awestruck. Despite the final result, your achievement resonates with 140… pic.twitter.com/YWzmltZuv9

    — M.K.Stalin (@mkstalin) August 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முதலமைச்சர் மு.க ஸ்டாலின்: செஸ் உலகின் 2 மற்றும் 3 தர வீரர்களை தோற்கடித்து,2023 உலக கோப்பை இறுதிப்போட்டியில் முன்னேறியது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உங்கள் சாதனை இந்தியாவின் 140 கோடி மக்களின் தேசிய கனவுகளுடன் எதிரொலிக்கிறது. முழு தேசமும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது, பிரக்ஞானந்தா! உங்கள் வெள்ளிப் பதக்கம் வரவிருக்கும் தலைமுறைகளை ஊக்குவிக்கும் மைல்கற்கள் அமையும் என தெரிவித்துள்ளார்.

  • Congratulations to the Indian ♟️ prodigy @rpragchess for a journey of brilliance at 2023 FIDE World Cup, finishing as a runner-up and setting new milestones!

    Your strategic prowess shone brightly amongst the world's finest, as you admirably outwitted your opponents in a… pic.twitter.com/68WyfPmREj

    — Anurag Thakur (@ianuragthakur) August 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்: 2023 FIDE உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளீர்கள். இந்த வெற்றியை இந்தியா மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் பாராட்டையும் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் சாதனைகளால் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சி அடைகிறது, உங்கள் எதிர்கால சாதனைகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

விஸ்வநாதன் ஆனந்த்: பிரக்ஞானந்தா நீங்கள் ஒரு சிறந்த வீரர் கண்டிப்பாக நீங்கள் மீண்டுவர முடியும் என இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மற்றும் முன்னாள் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒருநாள் உலக கோப்பை பயிற்சி அட்டவணை வெளியீடு! இங்கிலாந்து, நெதர்லாந்தை சந்திக்கிறது இந்தியா..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.