ETV Bharat / bharat

போலியோ இல்லாத புதுச்சேரியை உருவாக்க முனைப்பு - களத்தில் சுகாதாரத்துறை!

author img

By

Published : Feb 25, 2022, 3:49 PM IST

புதுச்சேரியில் போலியோ நோய் ஒழிப்பு விழிப்புணர்வு வாகனம் மற்றும் பேரணியை சுகாதாரத்துறைச் செயலாளர் உதயகுமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

போலியோ இல்லாத புதுச்சேரி
போலியோ இல்லாத புதுச்சேரி

புதுச்சேரி: ஆண்டுதோறும் போலியோ நோயைத் தடுப்பதற்காக 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்தினை அரசு இலவசமாக வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வரும் 27ஆம் தேதி அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் நடைபெற உள்ளது.

இதனையொட்டி புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை போலியோ விழிப்புணர்வு பேரணி மற்றும் போலியோ விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தை 2 நாட்களுக்கு அனுப்பி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்துள்ளது.

போலியோ இல்லாத புதுச்சேரி
போலியோ இல்லாத புதுச்சேரியை உருவாக்க முனைப்பு

இந்தநிலையில் சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் வாகனத்தை சுகாதாரத்துறைச் செயலாளர் உதயகுமார், கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதில், சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு, சுகாதாரத்துறை துணை இயக்குநர் முரளி, துணை இயக்குநர் டாக்டர் ஆனந்தலட்சுமி, துணை இயக்குநர் டாக்டர் ராஜாம்பாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் தொடர்பான வீடியோ...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.