அவர்களின் நினைவாக டெல்லியின் சாணக்கியாபுரி பகுதியில், தேசிய காவலர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு சின்னத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாட்டில், ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்கும் போது வீரமரணமடைந்த மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட காவலர் ஜெகதீஷ்துரை உள்பட 414 காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க : மனித உரிமை என்ற பெயரில் போலி அமைப்புகள் தொடங்கினால் நடவடிக்கை - சைலேந்திர பாபு