ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த துறவி ஆச்சாரியா ஸ்ரீ விஜய் வல்லப் சுரிஷ்வர் ஜி மகாராஜ், 1870-1954ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் மகாவீர் கொள்கையை பரப்புவதற்காக அர்ப்பணிப்புடன் தனது வாழ்க்கையை துறவினார். வெகுஜன மக்களின் நலன், கல்வியின் அவசியம், சமூக தீமைகளை ஒழித்தல் ஆகியவற்றுக்கு தனது வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்தார்.
மேலும், கவிதை, கட்டுரைகள், பக்தி பாடல்கள், எழுச்சியூட்டும் இலக்கியங்களையும் எழுதினார். ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், ஆய்வு மையங்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் ஆச்சாரியா ஸ்ரீ விஜய் வல்லப் சுரிஷ்வர் ஜி மகாராஜின் கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இவரது 151ஆவது பிறந்த நாள் விழா நாளை மறுநாள் (நவம்பர் 16) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஆச்சாரியா ஸ்ரீ விஜய் வல்லப் சுரிஷ்வர் ஜி மகாராஜை கவுரப்படுத்தும் வகையில், 151 அடி உயரமுள்ள அவரது சிலையை பாலி நகரில் உள்ள ஜெட்புராவின் விஜய் வல்லப் சாதனா கேந்திரத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இதற்கு "அமைதிக்கான சிலை" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஜின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் நாளை மறுநாள் திறந்து வைக்க உள்ளார்.