ETV Bharat / bharat

ஜி20 தலைமைத்துவத்தின் இலச்சினை, கருப்பொருள், இணையதளத்தை பிரதமர் வெளியிடுகிறார் - ஜி20 குறித்து பிரதமர் மோடி

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திற்கான இலச்சினை, கருப்பொருள், இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலி மூலம் வெளியிடுகிறார்

பிரதமர் வெளியிடுகிறார்
பிரதமர் வெளியிடுகிறார்
author img

By

Published : Nov 7, 2022, 3:51 PM IST

டெல்லி: இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியா வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளது. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் உலகளவில் பங்களிக்க ஜி20 தலைமைத்துவம் இந்தியாவிற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

இந்த ஜி20 தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள், இணையதளம் ஆகியவை இந்தியாவின் செய்தி மற்றும் அதிக முன்னுரிமைகளை உலகளவில் பிரதிபலிக்கும். இதனை பிரதமர் நரேந்திர மோடி நாளை (நவ 8) காணொலி மூலம் வெளியிடுகிறார்.

ஜி20 என்பது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85%, உலகளாவிய வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாகும். ஜி20 தலைமையின் போது, நாடு முழுவதும் பல இடங்களில் 32 வெவ்வேறு துறைகளில் சுமார் 200 கூட்டங்களை இந்தியா நடத்தும். அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாடு, இந்தியாவால் நடத்தப்படும் மிக உயரிய சர்வதேசக் கூட்டங்களில் ஒன்றாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்' - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.