டெல்லி : கோவிட் இரண்டாம் கட்ட பரவலின்போது நாடு முழுக்க ஆக்ஸிஜன் தேவை கணிசமாக அதிகரித்தது. பல இடங்களில் ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இதற்கிடையில் வருகிற செப்டம்பரில் கோவிட் மூன்றாம் கட்ட பரவல் இருக்கும் என்று எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவர்கள் எச்சரித்துவருகின்றனர்.
ஆகவே, இது குறித்தும் நாளைய கூட்டத்தில் விவாதிக்கக்கூடும். மேலும் சாலை போக்குவரத்து, விமானம் மற்றும் தொலைத் தொடர்பு துறைகளின் பணிகள் குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. முன்னதாக கடந்த ஒரு வாரமாக பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு அமைச்சக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஆகவே இக்கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த வாரம் அமைச்சரவை சீரமைக்கப்படுவது குறித்து செய்திகள் வெளியாகின. அப்போது புதிதாக சிலருக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.
இதனை உறுதிப்படுத்தும் அரசியல் நோக்கர்கள், அமைச்சரவை சீரமைப்பு மற்றும் விரிவாக்கம் தற்போது சாத்தியப்பட வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : மத்திய அமைச்சரவை மாற்றம்- புதுமுகங்களுக்கு வாய்ப்பு?