ETV Bharat / bharat

பணமதிப்பிழப்பு குறித்து பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும் - அசோக் கெலாட்

ராஜஸ்தான்: பணமதிப்பிழப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தினார்.

ashok kelat
ashok kelat
author img

By

Published : Nov 9, 2020, 11:09 AM IST

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தார். அதன்படி புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனைத் 'துரோக தினம்' என்று காங்கிரஸ் கட்சி அனுசரித்தது. அதனோடு, 'பணமதிப்பிழப்பு நீக்க பேரழிவுக்கு எதிராக பேசுங்கள்' என்ற ஆன்லைன் பரப்புரையையும் தொடங்கி வைத்தது.

இதுதொடர்பாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கூறியதாவது, "நான்கு ஆண்டுகளில், பண மதிப்பிழப்பினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பிரதமர் மோடி அறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும். இதனால் ஏற்பட்ட தவறுகளை சரிசெய்ய வேண்டும். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கரோனா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது.

கறுப்புப் பணத்தை ஒழிக்க கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பால், முன்பு இருந்ததைவிட தற்பேது பெரிய ஊழல் நடப்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகளவில் உள்ளன. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பணமதிப்பிழப்பினால், சிறிய, நடுத்தர வர்த்தகங்கள் அழிந்துவிட்டன. விவசாயிகள், தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர்.

மத்திய அரசு பாசிச சிந்தனையுடன் முடிவெடுக்கும் அதிகாரத்தில் செயல்படுவது ஆபத்தானது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: போதைப்பொருள் விவகாரம்: கரிஷ்மாவிடம் நாளை மீண்டும் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.