இந்தியா-சௌதி அரேபிய உறவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் தொலைபேசியில் உரையாடினர். அப்போது இரு நாட்டு உறவு, வர்த்தகம், முதலீடு ஆகியவை குறித்து விரிவாகப் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு இரு நாட்டு உறவுக்கான குழு அமைக்கப்பட்ட நிலையில், அக்குழுவின் செயல்பாடுகள் இதுவரை சிறப்பாக உள்ளன என இரு நாட்டு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், இரு நாட்டு முதலீடு, வர்த்தகத்தை மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என உறுதி தெரித்தனர்.
கோவிட்-19 எதிரான போரை இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் எனவும், இந்தியாவில் சௌதி அரேபிய தொழிலதிபர்களின் முதலீட்டுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சௌதி இளவரசரை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: நாட்டில் பிச்சைகாரர்களின் எண்ணிக்கை 4 லட்சம்!