ETV Bharat / bharat

பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி நிதி ஆயோகின் 7ஆவது கூட்டம் - நிதி ஆயோக் 2022

டெல்லியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோகின் 7ஆவது கவுசில் கூட்டம் நடக்கிறது.

PM Narendra Modi to chair NITI Aayog governing council meeting on Sunday

author img

By

Published : Aug 5, 2022, 4:55 PM IST

டெல்லி: இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிதி ஆயோகின் 7ஆவது நிர்வாக கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. மத்திய/மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் புதிய சகாப்தத்திற்கு இந்த கூட்டம் வழிவகுக்கும். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவார்.

இந்த கூட்டத்தில் மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புவகைகள் மற்றும் வேளாண் சமூகங்களின் தன்னிறைவை எட்டுதல், தேசிய கல்விக் கொள்கை- பள்ளிக்கல்வியின் அமலாக்கம், தேசிய கல்விக் கொள்கை- உயர்கல்வியின் அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.

2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின் இந்த நிர்வாக கவுன்சில் கூட்டம் முதல் முறையாக நேரடியாக நடைபெறுகிறது. இந்த நிர்வாக கவுன்சிலில் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உயர் அலுவலர்கள், நிதி ஆயோக்கின் துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாகவே கோதுமை விலை உயர்வு - இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.