ETV Bharat / bharat

"நம்பிக்கையில்லா தீர்மானம் பாஜகவுக்கு வரப்பிரசாதம்..." - பிரதமர் மோடி!

நம்பிக்கையில்லா தீர்மானம் தங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும்; 2024ஆம் ஆண்டிலும் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Modi
Modi
author img

By

Published : Aug 10, 2023, 5:56 PM IST

டெல்லி : நம்பிக்கையில்லா தீர்மானம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கவுரவ் கோகாய் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தனது தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வைத்து உள்ள நாட்டு மக்களுக்கு தாம் என்றும் நன்றி உணர்வு உள்ளவராக இருப்பதாக பிரதமர் மோடி கூறினார். நாட்டு மக்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அவர்களுக்கு தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளை நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்த வலியுறுத்திய கடவுகளுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக பிரதமர் மோடி கூறினார். மேலும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீதானது அல்ல என்றும்; மாறாக எதிர்க்கட்சிகளுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை என்றும்; அதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரண்டும் அதிக இடங்களை கைப்பற்றி உள்ளதாகவும், எனவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

மேலும் 2024ஆம் ஆண்டிலும் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நாங்கள் செஞ்சுரிகளை விளாசி வரும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் நோ பால்களை(No Ball) வீசி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக பல முக்கிய பிரச்னைகளை குறித்து நாம் விவாதிக்க வேண்டி உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். பொது மக்களின் நலன் கருதி பல மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் அந்த விவாதங்களில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

பாஜகவிடம் என்ன கேட்க வேண்டும், எப்படி கேட்க வேண்டும் என்பது கூட எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை என்றும்; பாஜக இளைஞர்கள் மீது அதீத நம்பிக்கை வைத்து உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : ராகுல் காந்தி பறக்கும் முத்தம் விவகாரம்... ஆதாரமில்லை எனத் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.