டெல்லி: இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவை நாம் கொண்டாடும் நிலையில், வீட்டுக்கு வீடு மூவண்ணக்கொடி இயக்கத்தை வலுப்படுத்துவோம். ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கும், 15ஆம் தேதிக்கும் இடையே உங்களின் வீடுகளில் மூவண்ணக்கொடியை ஏற்றுங்கள். காட்சிப்படுத்துங்கள். இந்த இயக்கம் தேசிய கொடியுடனான நமது தொடர்பை ஆழப்படுத்தும்.
இன்றைய தினம் நமது வரலாற்றில் தனிச்சிறப்பு உடையதாகும். 1947ஆம் ஆண்டு இதே நாளில் நமது தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நமது மூவண்ணக்கொடியோடு தொடர்புடைய குழுக்களின் விவரங்கள் முதல் முதலாவது மூவண்ணக்கொடியை பண்டித நேரு பறக்கவிட்டது வரை வரலாற்றின் சுவாரஸ்யமான தகவல்களை கீழே பகிர்ந்துள்ளேன்.
காலனித்துவ ஆட்சியை எதிர்த்து நாம் போராடிய போது சுதந்திர இந்தியாவுக்கான கொடி பற்றி கனவு கண்டவர்களின் போற்றத்தக்க துணிவையும், முயற்சிகளையும் இன்று நாம் நினைவுகூர்வோம். அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவு செய்யவும், அவர்கள் கனவுகண்ட இந்தியாவை கட்டமைக்கவும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நாட்டின் 15ஆவது குடியரசுத்தலைவர் ஆகிறார் திரெளபதி முர்மு - பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து!