அஸ்ஸாமில் தேமாஜியில் உள்ள சிலாபதரில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் கலந்துகொள்ள உள்ள பிரதமர் மோடி, இயற்கை எரிவாயு திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.
தொடர்ந்து, தேமாஜி, சுல்ச்சி பொறியியல் கல்லூரிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார்.
அஸ்ஸாமில், இந்தியன் ஆயிலின் பொங்கைகான் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்டிமேக்ஸ் (INDMAX) பிரிவு, மதுபன், திருப்கரில் உள்ள ஆயில் இந்தியா லிமிடெட்டின் இரண்டாம் நிலை சேமிப்புக் கிடங்கு மற்றும் டின்சுகியாவின் மாகூம், ஹெபீடா கிராமத்தில் உள்ள எரிவாயு அமுக்கி நிலையம் ஆகியவற்றை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இன்டிமேக்ஸ் பிரிவு:
இந்தியன் ஆயிலின் பொங்கைகான் சுத்திகரிப்பு நிலையத்தின் இன்டிமேக்ஸ் பிரிவானது இந்திய ஆயில், ஆர் அண்ட் டி நிறுவனத்தால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை அதிக எல்பிஜி, அதிக ஆக்டேன் பெட்ரோல் உற்பத்தியை அதிக தீவனப் பொருள்களிலிருந்து உற்பத்தி செய்கிறது.
இந்த இன்டிமேக்ஸ் பிரிவு சுத்திகரிப்பு நிலையத்தின் கச்சா பதப்படுத்தும் திறனை 2.35 (MMTPA) முதல் 2.7 எம்எம்டிபிஏ ஆக உயர்த்தும்.
எல்பிஜி உற்பத்தியை 50 (ஆயிரம் மெட்ரிக் டன்) முதல் 257 டிஎம்டி (TMT), மோட்டார் ஸ்பிரிட் (பெட்ரோல்) உற்பத்தி 210 டிஎம்டியில் இருந்து 533 டிஎம்டியாக உயர்த்தும்.
மேற்கு வங்கத்தில் மெட்ரோ ரயில் திட்டங்களை தொடங்கிவைக்கும் மோடி
மேற்கு வங்கத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள ஹூக்ளியில் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.
மேற்குவங்கம் தலைநகர் கொல்கத்தாவில் நோபரா - தக்ஷிணேஸ்வர் வரையிலான மெட்ரோ ரயிலின் நீட்டிப்புப் பணிகளை தொடங்கிவைக்கிறார். ஹூக்ளி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர், ரயிலை கொடியசைத்து தொடங்கிவைக்க உள்ளார்.
மத்திய அரசின் நிதியிலிருந்து ரூ.464 கோடியில் 4.1 கி.மீ துாரத்திற்கு இந்த ரயில்வே பாதையானது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து தென்கிழக்கு ரயில்வேயின் 132 கி.மீ நீளமுள்ள கரக்பூர்-ஆதித்யாபூர் மூன்றாம் வரிசை திட்டத்தின் 30 கி.மீ நீளத்திற்கு கலைகுண்டா முதல் ஜார்கிராம் இடையேயான மூன்றாவது பாதையை பிரதமர் மோடி திறந்துவைப்பார். இதற்கு ரூ.1,312 கோடி செலவிடப்பட்டுள்ளது.
கிழக்கு ரயில்வேயின் ஹவுரா-பண்டேல்-அசிம்கஞ்ச் பிரிவின் ஒரு பகுதியாக இருக்கும் கார்கிரகாட் சாலை பகுதிக்கு அசிம்கஞ்சை இரட்டிப்பாக்குவதை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். இதற்கு சுமார் 240 கோடி ரூபாய் திட்ட செலவில் போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மெட்ரோ நீட்டிப்பு பணிகளை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!