ETV Bharat / bharat

உக்ரைன் அதிபருடன் மோடி தொலைபேசியில் உரையாடல் - ரஷ்யா உக்ரைன் போர்

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 7) தொலைபேசியில் உரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PM Modi to speak to Ukrainian President Zelenskyy
பிரதமர் நரேந்திர மோடி
author img

By

Published : Mar 7, 2022, 10:13 AM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று (மார்ச் 7) உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடவுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னெட் ஞாயிற்றுக்கிழமையன்று உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உலக தலைவர்களான துருக்கி அதிபர் எர்துகான் மற்றும் பிரான்ஸ் நாட்டின் அதிபர் மாக்ரோன் ஆகியோர் தொலைபேசி வாயிலாக ரஷ்ய அதிபர் புதினை தொடர்பு கொண்டு உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.

எனினும், உக்ரைன் நாட்டில் இரண்டு நகரங்களில் போரை தற்காலிமாக நிறுத்திவைத்திருந்த ரஷ்ய ராணுவம் விரைவாக மீண்டும் தாக்குதல் தொடங்கினர். இதனால் உக்ரைன் மக்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உக்ரைனில் இருந்து 852 மாணவர்கள் மீட்பு : தமிழ்நாடு அரசின் சிறப்புக் குழுவால் சென்னை வரவழைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.