டெல்லி: PM-KISAN எனப்படும் பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 2019ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6,000 வழங்கப்படுகிறது. இதுவரை 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து இன்று புத்தாண்டை முன்னிட்டு, 10ஆவது தவணை வழங்கப்படஉள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் வழங்கஉள்ளார். இதுகுறித்து, முன்னதாக பிரதமர் அலுவலக ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டது. அதில், PM-KISAN மூலம் 10 கோடிக்கும் குடும்பங்கள் பயனடைகிறது.
10ஆவது தவணைக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1.6 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் சேரும்படி வழங்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோயில் கூட்ட நெரிசலில் 14 பேர் உயிரிழப்பு; தலா ரூ.12 லட்சம் நிவாரணம்