ETV Bharat / bharat

ஐஐடி காரக்பூர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி

author img

By

Published : Feb 23, 2021, 2:00 PM IST

ஐஐடி காரக்பூரில் இன்று நடைபெறவுள்ள 66ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

PM Modi to inaugurate Dr Syama Prasad Mookerjee Institute at IIT Kharagpur
ஐஐடி காரக்பூர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி

டெல்லி: ஐஐடி காரக்பூரில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை காணொலி வாயிலாக இன்று (பிப்ரவரி 23) பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.

மேலும், மேற்கு வங்க ஆளுநர், மத்திய கல்வியமைச்சர், மேற்கு வங்க கல்வியமைச்சர் பங்கேற்கும் ஐஐடி காரக்பூரின் 66ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்வார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பல்நோக்கு மருத்துவமனை ஆகிய இரண்டும் மத்திய கல்வி அமைச்சகத்தின் உதவியுடன் ஐஐடி காரக்பூரில் அமைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்துக்கும், பாதுகாப்புக்கும் இடையிலான இணைப்பின் விளைவாக இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்சி நிறுவனத்தில், எம்பிபிஎஸ் படிப்பு இந்தக் கல்வியாண்டில் தொடங்கும் எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கை அகதிகள் சம உரிமையுடன் வாழ பாஜக உறுதுணையாக இருக்கும் - ராஜ்நாத் சிங்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.