டெல்லி: நாடு முழுவதும் உள்ள தகுதியுடைய உழவருக்கு, பிரதமரின் உழவர் உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதன்படி, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மூன்று தவணைகளாகப் பிரித்து உழவரின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
![](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12717890_pmk.jpg)
அந்தவகையில், இன்று தகுதியுடைய உழவரின் வங்கிக் கணக்குகளில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.2000 விடுவித்துள்ளார். அதன்படி ஒன்பது கோடியே 75 லட்சத்துக்கும் அதிகமான உழவர் குடும்பங்களுக்கு சுமார் 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
![பிரதமரின் உழவர் உதவித்தொகை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12717890_mrsd.jpg)
இதுவரை விடுவிக்கப்பட்ட தொகை ரூ.1.38 லட்சம் கோடி
இந்த நிகழ்ச்சியின்போது நரேந்திர மோடி உழவருடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, நாட்டு மக்களிடமும் அவர் உரை நிகழ்த்தினார். உழவர் உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் இதுவரை மொத்தம் ரூ.1.38 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
![பிரதமரின் உழவர் உதவித்தொகை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12717890_egddh.jpg)
இதையும் படிங்க: நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிட்டார் பிடிஆர்!