டெல்லி: பாகிஸ்தானுடன் 1999ஆம் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் தேசத்தை பாதுகாக்க உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் கார்கில் தினம் ஜூலை 26ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று 23ஆவது ஆண்டாக கார்கில் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே, கார்கில் போரில் உச்சநிலை தியாகம் செய்த வீரம் செறிந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அதோடு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கார்கில் வெற்றி தினம் என்பது அன்னை பாரதத்தின் பெருமைக்கும், புகழுக்கும் அடையாளமாகும். இந்த தருணத்தில் தாய்நாட்டை பாதுகாக்க தங்களின் துணிவை வெளிப்படுத்திய வீரம் செறிந்த நாட்டின் புதல்வர்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள். ஜெய் ஹிந்த்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கார்கில் வெற்றி தினம் கொண்டாட்டம்