-
Speaking at the start of Budget Session of Parliament. https://t.co/3F7I8SKd8O
— Narendra Modi (@narendramodi) January 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Speaking at the start of Budget Session of Parliament. https://t.co/3F7I8SKd8O
— Narendra Modi (@narendramodi) January 31, 2023Speaking at the start of Budget Session of Parliament. https://t.co/3F7I8SKd8O
— Narendra Modi (@narendramodi) January 31, 2023
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று (ஜனவரி 31) காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத்துக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், எதிர்க்கட்சிகளின் கருத்துகளை நாங்கள் மதிக்கிறோம்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒருமித்த கருத்துகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் நாட்டின் வரவு செலவுத் திட்டம் சாமானிய குடிமக்களின் நம்பிக்கைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கும் வகையில் இருக்கும். இதற்கான அனைத்து முயற்சிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துள்ளார்.
இந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை "இந்தியா முதலில், குடிமகன் முதலில்" என்ற எண்ணத்தை முன்னிறுத்தி எடுத்து செல்வோம். இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் முர்மு ஆற்றும் உரை, நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கும், பெண்களின் மரியாதைக்கும் பெருமை சேர்க்கும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது