டெல்லி: நாடு முழுவதும் கரோனா தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், தலைசிறந்த மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த இணைய வழி ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அமைச்சர் மன்ஷுக் மண்டாவியா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வை அடுத்து மருந்து நிறுவன தலைமை அலுவலர்களுடனும் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
இதில் கரோனா நோய் சிகிச்சைக்காக பயன்படுத்தும் மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் முனைப்புடன், தங்களால் ஆன அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி உற்பத்தியை பெருக்க மோடி கேட்டுக்கொண்டார்.
நாட்டில் கரோனா தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த ஆலோசனை கூட்டம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.