டெல்லி : உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நமோ கட்டில் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வுகளை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். காசி தமிழ் சங்கமம் துவக்க விழாவில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
#WATCH | Varanasi: At Kashi Tamil Sangamam, Prime Minister Narendra Modi says, "...You all have come here as members of my family more than being just guests. I welcome you all to the Kashi Tamil Sangamam..." pic.twitter.com/IHDJmADDeT
— ANI (@ANI) December 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Varanasi: At Kashi Tamil Sangamam, Prime Minister Narendra Modi says, "...You all have come here as members of my family more than being just guests. I welcome you all to the Kashi Tamil Sangamam..." pic.twitter.com/IHDJmADDeT
— ANI (@ANI) December 17, 2023#WATCH | Varanasi: At Kashi Tamil Sangamam, Prime Minister Narendra Modi says, "...You all have come here as members of my family more than being just guests. I welcome you all to the Kashi Tamil Sangamam..." pic.twitter.com/IHDJmADDeT
— ANI (@ANI) December 17, 2023
ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் நாட்டின் 75வது கொண்டாட்ட விழாவான ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம் நிகழ்வு மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்டது. இதன் முதற்படியாக கடந்த 202ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், இதன் அடுத்த கட்டமாக காசி தமிழ் சங்கமம் 2.0 திட்டத்தை பிரதமர் மோடி இன்று (டிச. 17) வாரணாசியில் தொடங்கி வைத்தார். ஒரே பாரதம் உன்னத பாரத்ம் என கருத்தை முன்னிறுத்தும் வகையில் டிசம்பர் 17ஆம் தேதி முதல் வரும் 30ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
#WATCH | Prime Minister Narendra Modi flags off the Kashi Tamil Sangamam Express between Kanyakumari and Varanasi. pic.twitter.com/EaqVyhZ0cu
— ANI (@ANI) December 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Prime Minister Narendra Modi flags off the Kashi Tamil Sangamam Express between Kanyakumari and Varanasi. pic.twitter.com/EaqVyhZ0cu
— ANI (@ANI) December 17, 2023#WATCH | Prime Minister Narendra Modi flags off the Kashi Tamil Sangamam Express between Kanyakumari and Varanasi. pic.twitter.com/EaqVyhZ0cu
— ANI (@ANI) December 17, 2023
வட மற்றும் தென் இந்தியாவின் வரலாறு, பாரம்பரிய மற்றும் கலாசார நிகழ்வுகளை கொண்டாடும் வகையில் இந்த காசி தமிழ் சங்கமம் கொண்டாடப்படுகிறது. காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து ஏறத்தாழ ஆயிரத்து 400 பேர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கலாச்சார பரிமாற்றத்துடன் கூடுதலாக, கலை, இசை, கைத்தறி, கைவினைப் பொருட்கள், உணவு வகைகள் மற்றும் தமிழ்நாடு - காசி ஆகிய இரு பகுதிகளில் இருந்தும் தனித்துவமான தயாரிப்புகளிளை காட்சிப்படுத்தும் கண்காட்சியும் நிகழ்ச்சி நிரலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்வை முன்னிட்டு கன்னியாகுமரி - வாரணாசி இடையிலான விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
-
#WATCH | Prime Minister Narendra Modi inaugurates the Kashi Tamil Sangamam 2.0 at Namo Ghat, in Varanasi. pic.twitter.com/AbCnmNYq96
— ANI (@ANI) December 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Prime Minister Narendra Modi inaugurates the Kashi Tamil Sangamam 2.0 at Namo Ghat, in Varanasi. pic.twitter.com/AbCnmNYq96
— ANI (@ANI) December 17, 2023#WATCH | Prime Minister Narendra Modi inaugurates the Kashi Tamil Sangamam 2.0 at Namo Ghat, in Varanasi. pic.twitter.com/AbCnmNYq96
— ANI (@ANI) December 17, 2023
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "நீங்கள் அனைவரும் விருந்தினர்களாக இருப்பதை விட எனது குடும்ப உறுப்பினர்களாக இங்கு வந்திருக்கிறீர்கள். காசி தமிழ் சங்கமத்திற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்" என்று தெரிவித்தார். தொடர்ந்து காசி தமிழ் சங்கமத்தில் அமைக்கப்பட்டு உள்ள பாரம்பரிய மற்றும் கலாசார ஸ்தூபங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து 8 குழுக்களாக 2 ஆயிரத்து 500 பேர் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : "நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடியில் கடும் நடவடிக்கை - எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம்" - பிரதமர் மோடி!