டெல்லி: நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று (ஆக. 15) செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், "சர்வதேச விளையாட்டு போட்டிகளில் நமது வீரர்கள் குவிக்கும் பதக்கங்கள் இந்திய நாட்டின் திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.
அத்தகைய திறமைகளை கொண்ட விளையாட்டு வீரர்களை நாட்டு மக்கள் விளையாட்டை ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டும். இந்தியர்கள் சர்வதேச போட்டிகளில் வரலாறு படைத்துவருகின்றனர். அண்மையில் முடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 61 பதக்கங்களை நம் வீரர்கள் வென்றுள்ளனர். அதிகமான பதக்கங்கள் பெற்ற நாடுகளின் பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இது மிகப்பெரும் சாதனை. குறிப்பாக பளு தூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்திய வீரர்கள் வலிமை வாய்ந்தவர்களாக உள்ளனர். சொல்லப்போனால் மல்யுத்தத்தில் மட்டுமே 12 பதக்கங்கள் கிடைத்துள்ளது. அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேரனுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய முகேஷ் அம்பானி