கெவாடியா: குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "நான் ஏக்தா நகரில் இருக்கிறேன். ஆனால், என் மனது மோர்பியில் உள்ளது. எனது வாழ்நாளில், இதுபோன்ற வலியை நான் உணர்ந்தது இல்லை. ஒருபுறம், துக்கத்தால் நிறைந்த இதயம் உள்ளது, மறுபுறம் பொறுப்பு மற்றும் கடமைப் பாதை உள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் அரசு தோளோடு தோள் நிற்கும். மாநில அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. ராணுவம் மற்றும் விமானப்படை குழுக்களைத் தவிர மற்ற மீட்புப் பணி குழுக்கள் சம்பவயிடத்தில் உள்ளன. குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் மோர்பிக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை கவனித்துவருகிறார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இந்த விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மோர்பி தொங்கு பால விபத்துக்கு யார் காரணம்? - ஓர் பார்வை