நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தொடரின் போது பாஜக உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் சிலர் பங்கேற்கவில்லை. நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி உறுப்பினர்கள் பங்கேற்காதது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
உறுப்பினர்கள் நாடாளுமன்ற ஒழுங்கை பின்பற்ற வேண்டும் எனவும், இதுபோன்ற நடவடிக்கைகள் மீண்டும் தொடரக்கூடாது எனவும் கூறினார். பெகாசஸ் விவகாரத்தை காரணம் காட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.
இந்நிலையில், முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாநிலங்களவையில் பாஜக முழு பலத்துடன் இருந்தால் மட்டுமே மசோதாக்களை நிறைவேற்ற முடியும் என்ற நிலையில், உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: வெறுப்புப் பேச்சு: ஆர்எஸ்எஸ் தலைவருக்கு கேள்வி எழுப்பிய ஓவைசி