டெல்லி: உக்ரைன் - ரஷ்யாவில் போர் நடைபெற்று வரும் சூழலில், இந்தியாவின் பாதுகாப்புத்தயார் நிலை குறித்தும், நடப்பு உலகளாவிய சூழல் குறித்தும் ஆலோசிக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் உயர் மட்ட கூட்டம் இன்று (மார்ச் 12) கூட்டப்பட்டது.
அக்கூட்டத்தில், பிரதமர் மோடியின் பேச்சு குறித்த அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், 'பிரதமர் இந்தியாவின் எல்லைகளில் (கடல் எல்லை, வான்வெளி எல்லை) மேற்கொள்ளப்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் மற்றும் இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலை குறித்தும் விளக்கியுள்ளார்.
உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் இந்தியாவின் முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் பிரதமர் பேசியுள்ளார்.
மேலும், உக்ரைனின் போர்த்தாக்குதலில் சிக்கி உயிரிழந்த கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பாவின் உடலை மீட்புதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் எனவும்' பிரதமர் மோடி உத்தரவு தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு அலுவலர் அஜித் தோவால் மற்றும் மூத்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.