டெல்லி: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பிற அன்றாடத் தேவைகளுக்காக மாதம் ரூ.4,000 வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 30) தொடங்கி வைத்தார். டெல்லியில் இருந்து வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் குழந்தைகளுக்கான PM CARES திட்டத்தின் நன்மைகளை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சியில் அவர் பேசினார். இந்தத் திட்டத்தின்கீழ் பள்ளிக்குச்செல்லும் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமாக இதனை மாற்றுவதாக அவர் உறுதியளித்தார்.
மேலும் பேசிய மோடி, உயர்கல்வி மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கு கடன் தேவைப்படும் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் உதவும் என்று கூறினார். கரோனாவின்போது பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக இந்தத் திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.
"கரோனாவின்போது தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்த மக்களின் நிலைமை எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன். நான் குழந்தைகளுடன் பிரதமராக அல்ல, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகப் பேசுகிறேன். அவர்களில் ஒருவராக இருப்பதில் நான் மிகவும் நிம்மதியடைகிறேன்"என்று அவர் கூறினார்.
இந்த திட்டமானது மார்ச் 11, 2020 முதல், கரோனவால் பெற்றோர் இருவரையோ அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரையோ அல்லது வளர்ப்பு பெற்றோரையோ அல்லது எஞ்சியிருக்கும் பெற்றோரையோ இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்க, குழந்தைகளுக்கான நிதி உதவி வழங்கும் திட்டமானது PM CARES-மூலம் மே 29, 2021 முதல் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் பலனைப்பெறும் குழந்தைக்கு 23 வயது வந்தவுடன் 10 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன் குழந்தைகளின் விரிவான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் கல்வி மற்றும் உதவித்தொகை ஆகியவை கிடைக்கப்பெற்றிருக்கவேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். வயது மற்றும் சுகாதார காப்பீடு மூலம் அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்தல் ஆகியவை இதில் உள்ளடங்கியதாகும்.
இதையும் படிங்க:கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் - பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்!