ETV Bharat / bharat

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம், இலவச கல்வி - ஒன்றிய அரசு அறிவிப்பு

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் - ஒன்றிய அரசு

author img

By

Published : May 29, 2021, 6:16 PM IST

Updated : May 29, 2021, 7:39 PM IST

18:13 May 29

நாட்டில் கோவிட்-19 பாதிப்பு காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் 23 வயதை எட்டும்போது இந்தத் தொகை வழங்கப்படும் எனவும் பி.எம். கேர் நிதியிலிருந்து இந்த தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களின் 18 வயதை எட்டும்வரை மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் எனவும், அவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் எனவும் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.  

அவர்களின் உயர்கல்விக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டு அதற்கான வட்டியை அரசே செலுத்தும் எனவும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டு, அவர்கள் 18 வயதை எட்டும்வரை காப்பீட்டுத்தொகையை அரசே வழங்கும் எனவும் இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடத்த முடிவு - பிசிசிஐ அறிவிப்பு

Last Updated : May 29, 2021, 7:39 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.