ETV Bharat / bharat

"புதிய நாடாளுமன்ற கட்டிடம் காலத்தின் தேவை" - பிரதமர் மோடி உரை! - புதிய நாடாளுமன்றம் குறித்து மோடி உரை

டெல்லியில் புதிய நாடாளுமன்ற திறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்றம் இந்தியாவின் வலிமையை உலகிற்கு எடுத்துரைக்கிறது என்றும், இது தன்னிறைவு பெற்ற இந்தியாவின் எழுச்சிக்கு சாட்சியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். எதிர்வரும் காலத்தில் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், புதிய நாடாளுமன்றம் காலத்தின் தேவையாக இருந்தது என்றும் கூறினார்.

As number
பிரதமர் மோடி
author img

By

Published : May 28, 2023, 3:22 PM IST

டெல்லி பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று(மே.28) திறக்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதேபோல், தமிழ்நாட்டின் செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே நிறுவினார். இதில், மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நாடாளுமன்ற மக்களவையில் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. அப்போது, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையிலும், புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பை குறிக்கும் வகையிலும், 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை நினைவுகூரும் தபால் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, மக்களவையில் குழுமி இருந்த மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் சில அழியாத தருணங்கள் இடம்பெறும். அத்தகைய அழியாத ஒரு நாள்தான் இது. புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டிடம் அல்ல. இது, 140 கோடி இந்திய மக்களின் லட்சியச் சின்னம். இது இந்தியாவின் வலிமையை உலகிற்கு எடுத்துரைக்கிறது. இந்த புதிய நாடாளுமன்றம் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் எழுச்சிக்கு சாட்சியாக இருக்கும்.

புதிய நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க செல்கோல் இன்று நிறுவப்பட்டது. சோழர் காலத்தில் செங்கோல் என்பது நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக இருந்தது. செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நமது அதிர்ஷ்டம். இனி இந்த அவையில் நடவடிக்கைகள் தொடங்கும் போதெல்லாம் இந்த செங்கோல் நம்மை ஊக்குவிக்கும்.

இந்தியா முன்னேறும்போது, உலகம் முன்னேறும். இந்த புதிய நாடாளுமன்றம் இந்தியாவை வளர்ப்பதன் மூலம் உலகின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். இந்தியா ஜனநாயகத்தின் தாய், உலக ஜனநாயகத்தின் அடித்தளமும் கூட. இனி வரும் காலங்களில் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால், புதிய நாடாளுமன்றம் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாக இருந்தது. இன்று இந்த புதிய நாடாளுமன்றத்தை நிறுவியதற்காக நாம் பெருமிதம் கொள்கிறோம்.

கிராம பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை, நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது உறுதிமொழியாகவும், உத்வேகமாகவும் இருக்கிறது. இந்த கட்டிடம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற கட்டிடத்தின் மூலம் 60,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களின் கடின உழைப்பை போற்றும் வகையில் டிஜிட்டல் புகைப்படத் தொகுப்பை உருவாக்கியுள்ளோம்" என்று கூறினார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள மக்களவையில் 1,280 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களவை 300 உறுப்பினர்கள் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் அதிநவீன ஆடியோ மற்றும் காட்சி அமைப்புகளுடன் கூடிய குழு அறைகள் உள்ளன. இவை, நாடாளுமன்ற குழுக்களின் செயல்பாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கும்.

நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டம் நடந்தால், மக்களவையில் உள்ள 1,280 இருக்கைகளில் அமரலாம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வெவ்வேறு கருப்பொருளை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. மக்களவை தேசிய பறவையான மயிலையும், மாநிலங்களவை தேசிய மலரான தாமரையையும் மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: Sengol: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோல்.. வரலாறும், சர்ச்சையும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.