ETV Bharat / bharat

Manipur violence: மணிப்பூர் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டுக்கே அவமானம் - பிரதமர் மோடி கண்டனம்! - பிரதமர் மோடி

மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டுக்கே அவமானம் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Prime Minister
பிரதமர் மோடி
author img

By

Published : Jul 20, 2023, 12:17 PM IST

Updated : Jul 20, 2023, 5:11 PM IST

பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) டெல்லியில் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், அதற்கு சற்று முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டுக்கே அவமானம். இச்சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது, முற்றிலும் நாகரீகம் அற்றது.

இது போன்ற கொடூர குற்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கவும், நமது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநில அரசுகள் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். நீதியை நிலை நாட்டுவதும், எளிய மக்களை பாதுகாப்பதும் நமது கூட்டுப்பொறுப்பு" என தெரிவித்தார்.

முன்னதாக, மணிப்பூரில் வாழும் மெய்தீஸ் சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். மெய்தீஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு, குக்கி, நாகா, சோமி உள்ளிட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, கடந்த மே 3ஆம் தேதி, மெய்தீஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து, மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர்கள் அமைப்பு சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இதற்கு பேரணிக்கு எதிராக மெய்தீஸ் உள்ளிட்ட பிற சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல இடங்களில் கலவரம் வெடித்தது. வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. காவல் துறை மற்றும் ராணுவப் படையினர் மணிப்பூரில் குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மே 3ஆம் தேதி தொடங்கிய வன்முறை தற்போது வரை ஓயவில்லை. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரம் நடந்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் மணிப்பூரில் வன்முறையை சம்பவங்களை மத்திய, மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தின. மேலும், மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து மெளனமாக இருப்பதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பயணம் சென்ற பிரதமர் மோடி, வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு செல்லவில்லை என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன.

இதனிடையே, மணிப்பூரில் கலவரத்தின்போது இரண்டு பழங்குடியினப் பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ நேற்று (ஜூலை 19) முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பெண்கள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த வீடியோ கடந்த மே 4ஆம் தேதி கலவரம் உக்கிரமாக இருந்த நேரத்தில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Manipur Violence: பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் - முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட தலைவர்கள் கண்டனம்!

Last Updated : Jul 20, 2023, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.