ETV Bharat / bharat

"வளர்ந்த இந்தியாவை உருவாக்க, நாட்டின் உற்பத்தித் துறையை மேம்படுத்துவது மிக அவசியம்"

கர்நாடகாவின் மங்களூரூவில் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.3,800 கோடி மதிப்பிலான எந்திரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

author img

By

Published : Sep 3, 2022, 6:52 AM IST

Modi in Mangaluru
Modi in Mangaluru

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ரூ.3,800 கோடி மதிப்பிலான எந்திரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் திட்டங்களுக்கு அடிக்கல் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்டம்பர் 2) அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பல்வேறு திட்டங்களை தொடங்கியும் வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், "இந்திய வரலாற்றில் இந்த நாள் என்றும் நினைவில் நிறுத்த தக்க நாளாகும். பிராந்திய பாதுகாப்பாக இருந்தாலும், பொருளாதார பாதுகாப்பாக இருந்தாலும், இந்தியா மிகப்பெரிய வாய்ப்புகளை பெற்றுள்ளது. இன்று காலை ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு இந்தியரும் பெருமை அடைந்துள்ளனர். இன்று தொடங்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் கர்நாடகாவில் வாழ்க்கையை எளிதாக்குவதையும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் செய்யும்.

ஒரு மாவட்டம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற திட்டம், மீனவர்கள், கைவினைஞர்கள் மற்றும் விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு சந்தை கிடைக்க வழிவகை செய்யும். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க, நாட்டின் பொருள் உற்பத்தித் துறையை விரிவுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை நோக்கிய நாட்டின் முயற்சிகளே வளர்ச்சிக்கான முக்கிய மந்திரம். இத்தகைய முயற்சிகளின் விளைவாக, வெறும் 8 ஆண்டுகளில் இந்திய துறைமுகங்களின் திறன் ஏறத்தாழ இருமடங்காக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் கர்நாடகா அதிக அளவில் பயனடைந்துள்ளது. சாகர்மாலா திட்டத்தின்கீழ், அதிக அளவில் பயன் பெற்ற மாநிலங்களில் கர்நாடக மாநிலமும் ஒன்று. இந்த மாநிலத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 70 ஆயிரம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டங்கள் சேர்க்கப்பட்டு, ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகாவின் ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

நாட்டில் 3 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன. 8 லட்சத்துக்கும் அதிகமான கான்க்ரீட் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் நாட்டில் வெறும் 3 ஆண்டுகளில் ஆறு கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு முதல் முறையாக குழாய் மூலம் குடிநீர் வசதி அளிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், கர்நாடகாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும் போது, நமது குடிசைத் தொழில்கள், கைவினை கலைஞர்கள், தெருவோர வியாபாரிகள், ஆட்டோ ரிக்‌ஷா, டாக்சி ஓட்டுநர்கள் பயனடைவர். இன்று டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை வரலாற்று சிறப்புமிக்க நிலையில் உள்ளது. சுமார் 6 லட்சம் கி.மீ. கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் கிராமப் பஞ்சாயத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளன. 5ஜி வசதி இந்தத் துறையில் புதிய புரட்சியை கொண்டுவர இருக்கிறது.

கடந்தாண்டு உலகளாவிய தடங்கல்கள் பல இருந்த போதும், இந்தியாவின் ஏற்றுமதி அளவு 670 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது ஐம்பது லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு இருந்தது. 418 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது ரூ.31 லட்சம் கோடி மதிப்பில் வணிகப் பொருள் ஏற்றுமதி செய்து இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக கடல்வழி போக்குவரத்து குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பது கண்கூடாக தெரிகிறது. துறைமுக இணைப்பு சிறப்பானதாகவும், துரிதமானதாகவும் இருப்பதற்கு அரசு முயற்சி செய்கிறது. துறைமுகங்களுக்கிடையே தடையில்லா தொடர்புக்கு உதவும் வகையில் இருநூற்று ஐம்பதுக்கும் அதிகமான ரயில்வே மற்றும் சாலைத்திட்டங்கள், தேசிய பெருந்திட்டமான பிரதமரின் விரைவுசக்தி திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

இந்த விழாவில், கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் பி எஸ் எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஐஎன்எஸ் விக்ராந்த் பாதுகாப்புத்துறையின் மாற்றத்திற்கான எடுத்துக்காட்டு - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.