பெங்களூர்: பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (கேஐஏ) புதிததாக கட்டப்பட்டுள்ள 2-வது முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ-11) திறந்து வைத்தார்.
இந்த டெரிமினல் தளம் மூங்கில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் நட்பு முனையமாக இது கட்டப்பட்டுள்ளது.
'டெர்மினல் இன் எ கார்டன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய உள்கட்டமைப்பு வசதி, ஆண்டுதோறும் 2.5 கோடி பயணிகளுக்கு பயன்படும் வகையில் 13 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகள் டெர்மினல் வழியாக செல்லும்போது தோட்டத்தில் நடந்து செல்வது போல் தோன்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தென் இந்தியாவின் முதல் வந்தேபாரத் ரயில் சேவை; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்