புதுச்சேரியில் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டினர்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் பாவாணரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் போராட்டத்திற்கு பங்கேற்க வந்த 100க்கும் மேற்பட்ட அக்கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.
![100க்கும் மேற்பட்ட விசிகவினர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-02-vck-arrest-tn10044_26012021091557_2601f_1611632757_614.jpg)
தொடர்ந்து அவர்களிடமிருந்து கருப்பு கொடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து விசிக போராட்டம்!