ETV Bharat / bharat

ரூ.110-ஐ நெருங்கும் பெட்ரோல்.. தலையை பிய்த்துக்கொள்ளும் தலைநகர் வாசிகள்!

author img

By

Published : Oct 30, 2021, 10:50 AM IST

தேசிய தலைநகரில் பெட்ரோல் விலை ரூ.110-ஐ நெருங்குகிறது. இது வாகன ஓட்டிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Petrol
Petrol

டெல்லி : நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலை உச்சம் தொட்டுவருகிறது. அதற்கு தேசிய தலைநகர் டெல்லியும் விதிவிலக்கல்ல.

இங்கு சனிக்கிழமை (அக்.30) காலை முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.99க்கு விற்பனையாகிவருகிறது. டீசலை பொருத்தவரை 35 காசுகள் உயர்ந்து 97.72 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.114.81, டீசல் ரூ.105.86 எனவும், கொல்கத்தாவில் லிட்டர் பெட்ரோல் ரூ.100.84, டீசல் ரூ.105.74 எனவும் விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலை மாநிலத்திற்கு மாநிலம் மதிப்பு கூட்டப்பட்ட வரியின் நிகழ்வைப் பொறுத்து மாறுபடும். இதற்கிடையில், மத்திய அரசு பல எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுடன் எண்ணெய் விநியோகம் மற்றும் தேவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால் விலையில் உடனடி நிவாரணம் சாத்தியமில்லை. நாட்டிலேயே அதிகப்பட்சமாக மத்தியப் பிரதேசத்தின் அனுப்பூரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.120.4ஐ எட்டியது; டீசல் விலை ரூ. 109.5 ஆக உள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோலிய அமைச்சகம் சௌதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா போன்ற பல நாடுகளின் எரிசக்தி அமைச்சகங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதையும் படிங்க : எகிறும் பெட்ரோல் விலை - பைக்கை விற்று குதிரை வாங்கிய நபர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.