மும்பை : உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ், அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
இந்தக் கூட்டணி செவ்வாய்க்கிழமை (ஜன.11) உறுதியானது. தற்போது தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார், “உத்தரப் பிரதேச மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அங்கு காட்சிகள் மாறிவருகின்றன.
பாஜகவின் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அக்கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாதியை நோக்கி ஐக்கியம் ஆகின்றனர். இதெல்லாம் அங்கு என்ன நடக்க போகிறது என்பதற்கான முன்னோட்டம் ஆகும்” என்றார்.
இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் மூத்தத் தலைவர் நவாப் மாலிக், “கோவாவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி அமைய பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறோம். கோவா மாநிலத்திலும் மகாவிகாஸ் அகாதி கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க : UP Polls: அயோத்தியில் யோகி ஆதித்யநாத் போட்டி