ETV Bharat / bharat

நாட்டின் இருண்ட காலமான "அவசரநிலை" குறித்து மறந்துவிடக் கூடாது - பிரதமர் மோடி!

author img

By

Published : Jun 26, 2022, 3:31 PM IST

நாட்டின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இருக்கும் நாம், நாட்டின் இருண்ட காலமான அவசரநிலை குறித்து மறந்துவிடக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

PM Modi
PM Modi

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூன் 26), பிரதமர் நரேந்திர மோடியின் 90ஆவது மன்கி பாத் வானொலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, "நாட்டின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் நாம் இருக்கும் இந்த நேரத்தில், நாட்டின் இருண்ட காலம் பற்றி மறந்துவிடக் கூடாது. 1975ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்தான் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

அப்போது, நாட்டு மக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. மக்களுக்கு அரசியல் அமைப்புச்சட்டம் வழங்கிய வாழ்வதற்கான உரிமை, தனிநபர் சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் நசுக்கப்பட்டன. அப்போது ஜனநாயகத்தை நசுக்கவும் முயற்சிகள் நடந்தன.

நீதிமன்றங்கள், பத்திரிகை உள்ளிட்ட அனைத்து சமூக கட்டமைப்புகளும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டன. அதேநேரம் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது இருந்த நம்பிக்கையை அசைக்க முடியவில்லை. அப்போதைய சர்வாதிகாரத்தை ஜனநாயகம் வென்றது. நாட்டின் இந்த இருண்ட காலத்தை இளைஞர்கள் மறந்துவிடக்கூடாது" என்று கூறினார்.

இதையும் படிங்க: ஜெர்மனியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.