இந்தியாவில் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தற்போது மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.
டெல்டா பிளஸ்ஸால் நிகழயிருக்கும் பேரழிவு
இதனையடுத்து தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவி வரும் டெல்டா பிளஸ் கரோனா தொற்றை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தாவிட்டால், கரோனா 3ஆவது அலை வரக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா நெகட்டிவ் இருந்தால் கர்நாடகா செல்லலாம்
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து கர்நாடகாவிற்கு ரயில், விமானம், வாகனங்களில் வருபவர்கள் கண்டிப்பாக 72 மணி நேரத்திற்குள் எடுத்த கரோனா நெகட்டிவ் சான்றிதழைக் கொண்டு வரவேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லை என்றால், கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட, மருத்துவச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பூஞ்சைகளின் வரிசையில் கரோனா நோயாளிகளை தாக்கத் தொடங்கியுள்ள ’சைட்டோமேகுலோ’ வைரஸ்!