ETV Bharat / bharat

புத்தாண்டு பரிசா..? ஆயிரம் ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்த பேடிஎம்..! - தொழிநுட்ப நிறுவனங்களில் ஆட்குறைப்பு

Paytm lays off: இந்தியாவின் முன்னணி பேமென்ட் நிறுவனமான பேடிஎம் ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Paytm lays off over a thousand employees from various departments as cost cutting measures
பேடிஎம் பணி நீக்கம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 3:58 PM IST

ஹைதராபாத்: பேடிஎம் நிறுவனம் இந்தியாவின் முன்னணி பேமென்ட் நிறுவனமாக விளங்கி வருகிறது. புத்தாண்டு நெருங்கி வரும் சமயத்தில் நிறுவனம் தங்களுக்கு அன்பளிப்பு ஏதாவது வழங்கும் என ஊழியர்கள் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

50 ஆயிரத்திற்கும் குறைவான கடன்களை வழங்குவது, பொருட்களை வாங்கி விட்டு பணத்தைப் பின்னர் செலுத்துவது (buy now pay later) போன்ற சேவைகளை பேடிஎம் வழங்கி வந்த நிலையில், வழிகாட்டி நெறிமுறைகள் மாற்றப்பட்டதால் பேடிஎம் தனது கவனத்தை நிதி மேலாண்மை மற்றும் காப்பீடு மீது செலுத்தியது.

இந்நிலையில், சமீபத்தில் ஏஐ அடைந்து வரும் அபரீதமான வளர்ச்சியின் காரணமாகப் பல நிறுவனங்களும் ஊழியர்களைக் குறைத்து விட்டு ஏஐ தொழிநுட்பங்களை சார்ந்திருக்கும் என கூறப்பட்டு வந்தது. வளர்ச்சி அடைந்த, பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள நாடுகளில் முதலில் இந்த நிலை வரும் என கருதப்பட்ட நிலையில் இந்தியாவில் துவங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான பேடிஎம் நிறுவனத்திலேயே அத்தகைய நிலை வந்துள்ளது.

பேடிஎம் சில காலங்களாகவே ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் ஒரே மாதிரியான வேலையை ஏஐ மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதில், அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், பேடிஎம் நிறுவனம் பங்குச்சந்தையிலும் லிஸ்ட் செய்யப்பட்டு இருப்பதால் எதிர்பார்க்கும் முதலீட்டைத் திரட்டுவதற்கு லாபம் ஈட்ட வேண்டியது அவசியமாகியுள்ளது.

இதனால், பேடிஎம் நிறுவனம் செலவினங்களைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் (One 97 Communications) நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தில் இருந்து ஆயிரம் ஊழியர்கள் நீக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இது அந்நிறுவனத்தின் ஊழியர்களில் 10 சதவீதம் என கூறப்படுகிறது.

பேடிஎம் மட்டுமல்லாது பல புதிய தொழில்நுட்ப நிறுவனங்களும், இந்த ஆண்டு புதிதாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாகவும், இந்த ஆண்டு சுமார் 28 ஆயிரம் ஊழியர்கள் தங்கள் பணியை இழந்து இருப்பதாக லாங்ஹவுஸ் கன்சல்டிங் நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், ஒவ்வொரு ஆண்டும் பணியை இழக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

பிஸிக்ஸ் வாலா (Physics Wallah), உடான் (Udaan), தர்ட் வேவ் காஃபி (Third Wave Coffee), பிஸ்ங்கோ (Bizongo) உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஆண்டு அதிக அளவில் பணி நீக்கம் செய்திருந்தாலும், பிளிப்கார்ட் (Flipkart) பைஜூஸ் (Byjus) நிறுவனங்கள் இந்த ஆண்டு அவர்களின் சிறந்த ஊழியர்களுக்குக் கூட ஊதிய உயர்வுகளை வழங்காமல் உள்ளது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: ஆப் மூலம் கடன் வாங்கும் நண்பர்களே உஷார்! முதல்ல இத படிங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.