மோரதாபாத்: உத்தர பிரதேசம் மாநிலம் மோரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் அசிம் ஹூசைன். பித்தளை வியாபாரியான ஹூசைன் கடந்த வியாழக்கிழமை இரவு, டெல்லியில் இருந்து உத்தரபிரதேசம் நோக்கி செல்லும் பத்மாவத் ரயிலின் பொதுப் பெட்டியில் ஏறி பயணித்துள்ளார்.
ஹபுர் ரயில் நிலையத்தை ரயில் கடந்த போது ஹூசைனை சுற்றிவளைத்த மர்ம நபர்கள், அவரது தாடியை பிடித்து இழுத்தும் மத முழக்கங்களை கூறுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் மோரதாபாத் நகரை ரயில் அடைந்த நிலையில், நின்று கொண்டு இருந்த ரயிலில் இருந்து ஹூசைனை வெளியே தள்ளிய கும்பல் அவரை கடுமையாக தாக்கியது.
மேலும் மத முழக்கங்களை கூறுமாறு, ஹூசைனை தரக்குறைவாக பேசியும், அடித்தும் அந்த கும்பல் துன்புறுத்தியதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த ஹூசைனின் உறவினர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.
சம்பவம் குறித்து அசிம் ஹூசைன், ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். வீடியோ ஆதாரங்களை கைப்பற்றி தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தாதா சோட்டா ராஜனுக்கு பிறந்த நாள் வாழ்த்து பேனர் - 6 பேர் மீது வழக்குப்பதிவு!