ETV Bharat / bharat

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எப்போது? வெளியானது தகவல்! - The Cabinet Committee on Parliamentary Affairs chaired by Defence Minister Rajnath Singh

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற
நாடாளுமன்ற
author img

By

Published : Jun 14, 2022, 8:33 PM IST

Updated : Jun 14, 2022, 8:41 PM IST

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது.

இதில், அக்குழு ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12 வரை மழைக்கால கூட்டத்தொடரை நடத்த பரிந்துரை செய்துள்ளது. மொத்தம் 17 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து அறிவித்துள்ள நிலையில், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிவடைய உள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 18ஆம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பரிந்துரைக்கப்பட்ட மற்றும் நிலுவையிலுள்ள மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காவல் துறையினர் பிடித்து தள்ளியதில் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு

Last Updated : Jun 14, 2022, 8:41 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.