டெல்லி : முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், முன்னாள் துணை பிரதமர் லால் கிருஷ்ணன் அத்வானி ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் உள்ள அறை எண் 4 ஒதுக்கப்பட்டிருந்தது.
2007ஆம் ஆண்டுக்கு பிறகு வாஜ்பாய் தீவிர அரசியலில் இருந்து விலகிக்கொண்டார். அதன் பின்னர் இந்த அறை பாஜக மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது. அதற்கு முன்னதாக அத்வானி அறையிலிருந்து பெயர் பலகை நீக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் அத்வானியின் பெயர் பலகை நிறுவப்பட்டது. இதற்கிடையில் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அத்வானி போட்டியிடவில்லை.
ஆகையால் சம்பந்தப்பட் அறை ஓராண்டு காலம் காலியாக இருந்தது. இந்நிலையில் தற்போது அறை எண் 4, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறையை திங்கள்கிழமை (ஜூலை 19) முதல் ஜெ.பி. நட்டா பயன்படுத்திவருகிறார். அறையிலிருந்து வாஜ்பாய், அத்வானி பெயர் பலகைகள் நீக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது ஒருங்கிணைந்த ஜனதா தளம் மற்றும் அப்னா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடமளிக்கப்பட்டன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : காங்கிரஸின் பொய்களை முறியடியுங்கள்- நரேந்திர மோடி!