நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 13ஆம் தேதிவரை கூட்டத்தொடர் நடைபெறும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இரு நாள்களுக்கு முன்னதாகவே மக்களவை காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், விலைவாசி உயர்வு, வேளாண் சட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் அமளியில் ஈடுபட்டனர்.
ஓபிசி சட்ட மசோதா நிறைவேற்றத்திற்கு மட்டும் எதிர்க்கட்சிகள் ஆதரவு தந்த நிலையில், பல்வேறு மசோதாக்கள் எந்தவித விவதமும் இன்றி அவசர கதியில் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தொடரில் மக்களவையில் செயல்பாடு 22% மட்டுமே எனத் தெரிவித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஒரு மாத கூட்டத்தொடரில் 21 மணிநேரம் மட்டுமே மக்களவை பணியாற்றியுள்ளதாகக் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு முன்னதாகவே மக்களவை இன்றே காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதேவேளை, மாநிலங்களவை நடவடிக்கைகள் நாளை நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: உள்நாட்டு போர் - ஆப்கானிலிருந்து நாடு திரும்பிய இந்தியர்கள்