டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் ஜூலை 18 அன்று தொடங்க இருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் அவைத்தலைவர், அவைக்குப் புறம்பான அவதூறான வார்த்தைகளை இனி நாடாளுமன்றத்தில் பேசக்கூடாது என அறிவித்துள்ளார். இதற்காக நாடாளுமன்ற தலைமையகம் இந்த சொற்கள் நிறைந்த தொகுப்பை வெளியிட்டுள்ளது.
இதில் உள்ள வார்த்தைகளை ராஜ்யசபா மற்றும் லோக்சபா என இரு அவைகளிலும் பேச தடைவிதிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா செயலகம் இது குறித்து வெளியிட்டுள்ள புதிய கையேட்டில், இந்தி வார்த்தைகளான 'ஜூம்லஜீவி', 'பால் புத்தி' உள்ளிட்ட வார்த்தைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. abused, 'betrayed', 'corrupt', 'drama', 'hypocrisy' போன்ற ஆங்கில வார்த்தைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. 'ஊழல்', 'நாடகம்', 'கபடம்' என இந்தப் பட்டியலில் அதிகமான வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஜூலை 18-ம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்துக்குப் புறம்பான சொற்கள் என பட்டியலிட்ட அனைத்து சொற்களும் விவாதங்களின்போதும் அல்லது இரு அவைகளின் உரையாற்றும் போதும் பயன்படுத்தப்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில வார்த்தைகள் நாட்டில் உள்ள பல்வேறு சட்டமன்ற அமைப்புகளிலும், காமன்வெல்த் நாடாளுமன்றங்களிலும் அவ்வப்போது அவைத் தலைவரால் நாடாளுமன்றத்திற்குப் புறம்பானவையாக அறிவிக்கப்பட்டு, எதிர்காலத்தில் தயார் குறிப்புக்காக மக்களவை செயலகத்தால் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த தொகுப்பில் 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் லோக்சபா, ராஜ்யசபா மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படாத வார்த்தைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. 2020-ல் சில காமன்வெல்த் நாடுகள், பார்லிமென்ட் நடவடிக்கைகளின் போது பேசப்படும் மற்ற சொற்களை இணைத்துப் படிக்காத வரையில் சில முக்கிய வார்த்தைகள் அவதூறு வார்த்தைகளாக தோன்றாது என்று பட்டியல் கூறுகிறது. இரு அவைகளிலும் அவைத் தலைவருக்கு எதிராக ஆங்கிலம் அல்லது இந்தியில் கூறப்படும் கூற்றுகள், அவை நாடாளுமன்றத்திற்குப் புறம்பானதாகக் கருதப்பட்டு, நாடாளுமன்றத்தின் பதிவேடுகளிலிருந்து நீக்கப்படும்.
அமர்வின் போது நாடாளுமன்றத்தின்போது புறம்பான வார்த்தைகள் தலைவரால் நீக்கப்படும். இந்தப் பட்டியலில் 'disgrace', 'donkey', 'drama', 'eyewash', 'fudge', 'hooliganism', 'hypocrisy', 'incompetent', 'mislead', 'lie' ஆகிய ஆங்கில வார்த்தைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:ரஃபேல் போர் விமானங்களை லே எல்லையில் நிறுத்தியுள்ள இந்தியா!