ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியின் மெக்லஸ்கிஜங் நகரில் உள்ள மலர் பழங்குடியின மக்களில் பெரும்பாலானோர் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி அருகில் நடைபெற்ற முட்மா கண்காட்சியை பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு பழங்குடியின தம்பதியிடம் இருந்த கைக்குழந்தையை, சிறுபான்மையின குடும்பத்தினர் ஒருவர் ரூ.20,500-க்கு ஒப்பந்தத்துடன் வாங்கியுள்ளார்.
இதனையடுத்து கண்காட்சி முடிவடைந்து வந்து கிராம மக்கள், நடந்த நிகழ்வை அறிந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள் என்ற அமைப்பினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை ஆய்வு செய்த பஜ்ரங் தள் அமைப்பினர், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குழந்தையை பெற்றோரிடம் கேட்டபோது குழந்தையின் தந்தை ஒப்புதல் அளிக்கவில்லை என்பதும், எனவே அவரை மது அருந்த வைத்து, அவரது விரல் ரேகையை ஒப்பந்தத்தில் பதிய வைத்ததும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் - யாதவ மகா சபை தலைவர்