ETV Bharat / bharat

யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்தது எப்படி? - ஸ்ருதி ஷர்மா பேட்டி

யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த ஸ்ருதி ஷர்மா தனக்கு பெற்றோர், நண்பர்கள் உறுதுணையாக இருந்தனர் என்று கூறியுள்ளார்.

ஸ்ருதி ஷர்மா
ஸ்ருதி ஷர்மா
author img

By

Published : May 30, 2022, 8:50 PM IST

டெல்லி: 2021ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission - UPSC) நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு (Civil Services Examinations) முடிவுகள் இன்று (மே 30) வெளியாகின. இந்தத் தேர்வில் டெல்லியைச் சேர்ந்த ஸ்ருதி ஷர்மா தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அங்கிதா அகர்வால் மற்றும் காமினி சிங்லா ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

முதலிடம் பெற்றது குறித்து ஸ்ருதி ஷர்மா ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறுகையில், "நான் முதலிடம் பெறுவேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இது மகிழ்ச்சியாக உள்ளது. என் பெற்றோர், நண்பர்கள் எனக்கு மிகவும் ஆதரவாகவும்,உறுதுணையாகவும் இருந்தார்கள்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த முறை 1 மதிப்பெண்ணில் அதுவும் மொழிப் பிரச்னையால் வாய்ப்பை தவறவிட்டேன். அதன்பின் ஆங்கில மொழியினை தேர்ந்தெடுத்து நன்கு படித்தேன். இது எனக்கு உதவிகரமாக அமைந்தது.

ஸ்ருதி ஷர்மா
ஸ்ருதி ஷர்மா

புத்தகங்கள், கவிதைகள் படிக்கப் பிடிக்கும். சில நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வேன். அதேபோல் சமூக வலைதளங்களையும் பயன்படுத்துவேன். ஆனால், அதில் அதிக நேரம் செலவிடாமல் முறையாகப் பயன்படுத்துவேன்" என்று கூறினார்.

ஸ்ருதி ஷர்மா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) முதுகலைப் பட்டம் பெற்றவர். கடந்த நான்கு ஆண்டுகளாக யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்த ஸ்ருதி ஷர்மா, ஜாமியா மில்லியா இஸ்லாமியா ரெசிடென்ஷியல் கோச்சிங் அகாடமியில் படித்தவர் ஆவார்.

ஜாமியா பயிற்சி அகாடமியில் படித்த 23 மாணவர்கள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அந்த அகாடமி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: UPSC தேர்வு முடிவு வெளியீடு; முதல் மூன்று இடங்களில் பெண்கள் ராஜ்ஜியம்.. 42ஆவது இடத்தில் தமிழ்நாடு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.